close
Choose your channels

மறைந்த நடிகர் பால்வாக்கரின் மகள் வெளியிட்ட வீடியோ: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

Wednesday, August 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் பால்வாக்கரின் மகள் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ’ஃபாஸ்ட் அன் பியூரியஸ்’ படத்தின் அத்தனை பாகங்களும் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் கோடிக்கணக்கில் வசூல் குவித்தது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் வின் டீசல் மற்றும் பால் வாக்கர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஃபாஸ்ட் அன் ஃபியூரியஸ்’ திரைப்படத்தின் ஏழாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே கார் விபத்து ஒன்றில் பால் வாக்கர் அகால மரணமடைந்தார். அவரது மறைவு அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பால் வாக்கரின் மகள் மேடோ ரெயின் வாக்கர் என்பவர் தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டவர் ஒரு அமெரிக்க நடிகர் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் நீச்சல் குளத்தில் இருந்தபடி தெரிவிக்கும் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment