'FastX' படத்தில் பால்வாக்கர் மகள்.. இன்ஸ்டாவில் எமோஷனல் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படத்தின் 10வது பாகம் ’FastX’ வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் பால்வாக்கர் மகள் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் முதல் பாகத்தில் இருந்து 7ஆம் பாகம் வரை நடித்தவர் பால்வாக்கர். இவர் 7ஆம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது கார் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பின் ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ 7ஆம் பாகம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பால் வாக்கர் விபத்தில் மரணம் அடைந்த போது அவரது மகள் மெடா ரெயின் வாக்கர் ஐந்து வயதாக இருந்தார். தற்போது 24 வயதாக இருக்கும் மெடா ரெயின் வாக்கர், ’FastX’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
இந்த படத்தில் நடித்தது குறித்து மெடா ரெயின் வாக்கர் கூறியபோது, ‘ஃபாஸ்ட் X இல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன். எனக்கு ஒரு வயது இருக்கும் போது முதல் பாகம் வெளியானது. என் அப்பா, வின், ஜோர்டானா, மிஷல், கிறிஸ் மற்றும் பலரை திரையில் பார்த்து வளர்ந்தேன். என் அப்பாவுக்கு நன்றி, நான் இந்த இடத்திற்கு வந்திருக்கின்றேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் அப்பாவின் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படத்தின் அனைத்து பாகங்களிலும் ஹீரோவாக நடித்த வின் டீசல் இந்த படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments