பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி காலமானார்.
Send us your feedback to audioarticles@vaarta.com
காலத்தால் அழியாத பாடல்களான கொக்கரக் கொக்கரக்கோ சேவலே, துணிந்தால் துன்பமில்லை, என்னருமை காதலிக்கு வெண்ணிலவே, வாடிக்கை மறந்ததும் ஏனோ, .சின்னப்பயலே...சின்னப்பயலே உள்பட நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கெளரவம்மாள் என்பவரை திருமணம் செய்த ஐந்து மாதங்களில் அகால மரணம் அடைந்தார். 1959ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இறக்கும் போது இவருக்கு 5 மாதத்தில் குழந்தை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கணவர் மறைந்து 60 ஆண்டுகள் கழித்து நேற்று அவருடைய மனைவி கெளரவம்மாள் காலமானார். அவருக்கு வயது 79. உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டை தாலுகா செங்கப்படுத்தான்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com