அஜித்தின் அடுத்த படத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்: அதிரடி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் அடுத்த திரைப்படமான ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் பிரபல நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள ’துணிவு’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் வரும் பொங்கல் திருநாளில் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த இரண்டு கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முதலாவதாக இந்த படத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், ஒரு கேரக்டரில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டு அவரது போஸ்டரும் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சாலமன் பாப்பையா உள்ளிட்ட பட்டிமன்ற பேச்சாளர்கள் திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது மோகனசுந்தரமும் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடிகர் பிரேம் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேலும் சிலருடைய கேரக்டர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#ThunivuCharactersRevealhttps://t.co/R8cNPMG91U
— Boney Kapoor (@BoneyKapoor) December 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com