விஜய்க்கு நெருக்கடி கொடுக்க கொடுக்க அவருக்கு நல்லதுதான்: பட்டிமன்ற பிரபலம்

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனை செய்து எந்தவொரு ஆவணமும் சிக்கவில்லை என்று தகவல் அளித்துள்ள நிலையில் இந்த சோதனை குறித்து பல திரையுலக மற்றும் அரசியல்வாதிகள் கருத்து கூறி வருகின்றனர்

அந்த வகையில் பட்டிமன்ற பிரபலமான லியோனி அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது ’விஜய்க்கு அரசியல்வாதிகள் நெருக்கடி கொடுக்க கொடுக்க அவருக்கு நல்லது தான் அவரது படம் இன்னும் அதிகமாக வசூல் ஆகும் என்று கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியிருப்பது என்பது நிச்சயமாக ஒரு பழிவாங்கும் செயல் தான் என்றும், அமைச்சர்கள் இது குறித்து கேள்வி கேட்காமலேயே ’இது பழிவாங்கும் செயல் அல்ல என்று கூறுவதில் இருந்தே இது பழிவாங்கும் செயல் என்பதை உறுதி செய்வதாகவும் கூறியுள்ளார்

மேலும் விஜய்க்கு அரசியல்வாதிகள் மற்றும் ஆளும் தரப்பினர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க கொடுக்க அவருடைய படங்கள் மேலும் அதிகமாக வசூல் செய்யும் என்று கூறிய லியோனி பாஜகவுக்கு ஆதரவாக பேசிய ரஜினி வீட்டில் ரெய்டு செய்யாமல் அரசுக்கு எதிராக விஜய் பேசி வருவதால் வருமான வரி ரெய்டு நடப்பதாகவும் கூறினார்

மேலும் விஜய் போன்ற கலைஞர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் அவரை ஜோசப் விஜய் என்று கூறி ஒரு குறிப்பிட்ட மதச்சாயம் பூச ஒருசிலர் முயல்வது தவறானது என்றும் லியோனி தெரிவித்தார்