விஜய் கூறிய குட்டிக்கதைக்கு விளக்கம் கூறிய பட்டிமன்ற பேச்சாளர்

  • IndiaGlitz, [Friday,September 27 2019]

சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்’ படத்தின் ஆடியோ விழாவில் விஜய் ஒரு குட்டிக் கதையை கூறினார். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைத்தால் தான் சரியாக இருக்கும் என்பதை கூறுவதற்காக ஒரு திருக்குறளை கூறிய அவர், பூக்கடையில் வேலை பார்த்த ஒருவரை பட்டாசு கடையில் வேலைக்கு வைத்தால் என்ன நடக்கும் என்பது குறித்த கதையைக் கூறினார்.

இந்த நிலையில் இதே கதையை பட்டிமன்ற பேச்சாளர் கவிதா என்பவர் ஏற்கனவே ஒரு மேடையில் பேசியதை டுவிட்டரில் குறிப்பிட்ட ஒரு சிலர் குறிப்பிட்டு கவிதாவின் பேச்சை விஜய் காப்பியடித்து பேசியதாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் இதற்கு பட்டிமன்ற பேச்சாளர் கவிதா விளக்கம் அளித்துள்ளார். விஜய் கூறிய குட்டிக் கதையை நானும் வேறு ஒரு இடத்தில் கேள்விப்பட்டு தான் கூறினேன். அது என்னுடைய கதை அல்ல. என்னை போலவே அவரும் புத்தகங்கள் படித்தோ அல்லது மற்றவர்கள் கூறியதைக் கேட்டோ, இந்த கதையை கூறியிருப்பார் எனவே இதில் கிண்டல் செய்வதற்கு எதுவுமில்லை என்று விளக்கமளித்துள்ளார். மேலும் அந்த குட்டிக்கதையை அவர் என்னை விட விளக்கமாக மிகவும் பொருத்தமான திருக்குறளுடன் கூறியது என்னை மிகவும் கவர்ந்தது.

நான் இதுவரை விஜய்யின் ரசிகையாகத்த்தான் இருந்து வந்தேன். இனிமேல் அவருடைய பேச்சுக்கும் நாம் ரசிகை என்று கவிதா தெரிவித்தார்.

More News

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய விருந்தாளி

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் பத்து நாள்களில் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடந்த சீசனில் பங்கேற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து கொண்டிருக்கின்றனர் 

6 மாதத்தில் கட்சி, 2021ல் முதல்வர்: ரஜினி குறித்து பிரபல அரசியல்வாதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்து அதன்பின் அதற்கான பணிகளை செய்து வந்தார். கட்சி ஆரம்பிக்கும் பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும்,

என்னால ஃபைனல்ஸ் போக முடியாது: லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று கவின் வெளியேறிய நிலையில் கவினின் வெளியேற்றத்தால் லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய இருவரும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

'பிகில்' ஆடியோ விழாவிற்கு பின் விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்

சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் விஜய் பேசிய ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் பேசிய ஒரு விஷயம் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை

சீட் பெல்ட் அணியாததால் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டி அதிர்ச்சி

நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வில்லை என்றும் கூறி, அபராதம் வசூலிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது