விஜய் கூறிய குட்டிக்கதைக்கு விளக்கம் கூறிய பட்டிமன்ற பேச்சாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்’ படத்தின் ஆடியோ விழாவில் விஜய் ஒரு குட்டிக் கதையை கூறினார். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைத்தால் தான் சரியாக இருக்கும் என்பதை கூறுவதற்காக ஒரு திருக்குறளை கூறிய அவர், பூக்கடையில் வேலை பார்த்த ஒருவரை பட்டாசு கடையில் வேலைக்கு வைத்தால் என்ன நடக்கும் என்பது குறித்த கதையைக் கூறினார்.
இந்த நிலையில் இதே கதையை பட்டிமன்ற பேச்சாளர் கவிதா என்பவர் ஏற்கனவே ஒரு மேடையில் பேசியதை டுவிட்டரில் குறிப்பிட்ட ஒரு சிலர் குறிப்பிட்டு கவிதாவின் பேச்சை விஜய் காப்பியடித்து பேசியதாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் இதற்கு பட்டிமன்ற பேச்சாளர் கவிதா விளக்கம் அளித்துள்ளார். விஜய் கூறிய குட்டிக் கதையை நானும் வேறு ஒரு இடத்தில் கேள்விப்பட்டு தான் கூறினேன். அது என்னுடைய கதை அல்ல. என்னை போலவே அவரும் புத்தகங்கள் படித்தோ அல்லது மற்றவர்கள் கூறியதைக் கேட்டோ, இந்த கதையை கூறியிருப்பார் எனவே இதில் கிண்டல் செய்வதற்கு எதுவுமில்லை என்று விளக்கமளித்துள்ளார். மேலும் அந்த குட்டிக்கதையை அவர் என்னை விட விளக்கமாக மிகவும் பொருத்தமான திருக்குறளுடன் கூறியது என்னை மிகவும் கவர்ந்தது.
நான் இதுவரை விஜய்யின் ரசிகையாகத்த்தான் இருந்து வந்தேன். இனிமேல் அவருடைய பேச்சுக்கும் நாம் ரசிகை என்று கவிதா தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout