'அசுரன்'-'பட்டாஸ்' படங்களின் ரன்னிங் டைம் ஒற்றுமை!

  • IndiaGlitz, [Tuesday,January 14 2020]

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடைசி நிமிடம் வரை நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று காலை இந்த படத்தின் அட்டகாசமான வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ’பட்டாஸ்’திரைப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 21 நிமிடங்கள், அதாவது 141 நிமிடங்கள் ஆகும்.

தனுஷின் முந்தைய சூப்பர் ஹிட் வெற்றி படமான ’அசுரன்’ திரைப்படத்தி ரன்னிங் டைம் 140 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ’அசுரன்’ படத்தின் ரன்னிங் டைமையே பெற்றுள்ள ’பட்டாஸ்’திரைப்படம் அசுரன் போலவே வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.