பிறந்த நாளில் கெளதம் மேனனின் மாஸ் போஸ்டர்.. 'பத்து தல' படக்குழு ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவர் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ’பத்துதல’ பட குழுவினர் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது.
’பத்து தல’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், ‘AGR உலகில் கௌதம் மேனன் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும் கௌதம் மேனன் சிம்புவுடன் இருக்கும் மாஸ் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதுவரை கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்புவை பார்த்திருக்கின்றோம். இப்போது சிம்புவின் படத்தின் கெளதம் மேனனை பார்க்க போகிறோம்’ என ரசிகர்கள் இந்த போஸ்டருக்கு கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் ’பத்து தல’ திரைப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குனர் கௌதம் மேனன், விஜய் நடித்துவரும் ’லியோ’, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ’விடுதலை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Wishing Our Beloved Filmmaker & Actor Gautham Vasudev Menon sir, a Very Happy Birthday 🥳✨ From Entire team of #PathuThala
— Studio Green (@StudioGreen2) February 24, 2023
Can't wait to see you in #AGR's world 🔥@menongautham #HappyBirthdayGauthamVasudevMenon #HBDGVM #HappyBirthdayGVM#Atman #SilambarasanTR pic.twitter.com/np4P6nknZF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com