'பத்து தல' இயக்குனரின் அடுத்த படம்.. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’பத்து தல’ படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை பிரபல தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு வருடம் முடிந்த பின்னர் தற்போது இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணா என்பவருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே சூர்யா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ ஆரி நடித்த ’நெடுஞ்சாலை’ மற்றும் ஒரு தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகயிருக்கும் அடுத்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் கிருஷ்ணா இணையும் படத்தில் நடிக்கும் நாயகன், நாயகி உட்பட மற்ற விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே நயன்தாராவின் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் ’லப்பர் பந்து’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments