close
Choose your channels

'பத்து தல' படத்தின் மாஸ் அப்டேட் தந்த 'அசுரன்' நடிகர்!

Monday, August 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படப்பிடிப்பில் சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தீஜே என்ற நடிகர் நடித்து வருகிறார். இவர் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படத்தில் தனுஷ் மகனாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் மற்றும் இசையமைப்பாளர் தீஜே, ஜிம்மில் இருந்தவாறு எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’பத்து தல’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதை அடுத்து ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்பது உறுதியாகி உள்ளது.

’அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக முக்கிய கேரக்டரில் நடிக்க தீஜே, இந்த படத்திலும் கதைக்கு திருப்புமுனை தரும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பதாகவும், இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் தீஜேவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா என்பவரின் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ’பத்து தல’ திரைப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment