ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன்.. மூவரும் சேர்ந்தாலும் ரஜினியை வெல்ல முடியாது: 'பதான்' இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகிய மூவரும் சேர்ந்தாலும் ரஜினியை வெல்ல முடியாது என ஷாருக்கான் நடித்த 'பதான்’ திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என்பதும் பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலர் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சித்தார்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த படம் 10 நாட்களில் சுமார் 700 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சித்தார்த் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ஷாருக்கான் சல்மான்கான் ஹிருத்திக் ரோஷன் ஆகிய மூவரும் ஹீரோக்களாக நடித்து அந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்தால் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுப்பினார்.
அப்போது ஷாருக்கான் சல்மான்கான் ஹிருத்திக் ரோஷன் ஆகிய மூவரும் சேர்ந்தாலும் ரஜினிகாந்தை வெல்ல முடியாது என்றும் ரஜினியை தோற்கடிக்க இன்னொரு ரஜினிகாந்த் தான் வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
#Pathaan Director About #SuperstarRajinikanth 🔥💥
— Raana (@Raana_official) February 3, 2023
Wat if #Rajinikanth as Villain in #Yrf universe against #SRK #SalmanKhan & #HrithikRoshan #Siddharth says How can thy win against him. We Need Another #Rajinikanth to win over a #Rajinikanth 👑🤴
SUPER ONE RAJINI THINGS ⭐ pic.twitter.com/sBv1hBQNOT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com