பதானை விட டபுள் மடங்கு கவர்ச்சியில் தீபிகா.. பட்டையை கிளப்பிய 'பைட்டர்' டீசர்..!

  • IndiaGlitz, [Friday,December 08 2023]

ஷாருக்கான் நடித்த ’பதான்’ திரைப்படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான ‘பைட்டர்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஷாருக்கானுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக ’பதான்’ அமைந்த நிலையில் ஹிருத்திக் ரோஷனுக்கு ‘பைட்டர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசரில் டாம் குரூஸ் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு இணையாக ஹிருத்திக் ரோஷன் ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளார்.

அதேபோல் ’பதான்’ திரைப்படத்தில் காவி பிகினி அணிந்து இளசுகளை மயக்கிய தீபிகா படுகோன் இந்த படத்திலும் செம கிளாமரில் தோன்றுகிறார். குறிப்பாக ஹிருத்திக் ரோஷன் உடன் கடலில் கட்டி புரண்டு பிகினியில் நடித்துள்ள முத்தக்காட்சி ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

மொத்தத்தில் ’பதான்’ திரைப்படம் போல் சித்தார்த் ஆனந்தின் ‘பைட்டர்’ படமும் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.