சர்தார் பட்டேல் சிலை: ரூ.3000 கோடி வீணா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் மிக உயர்ந்த சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இந்த சிலையை வடிவமைக்க சுமார் ரூ.3000 கோடி செலவானதாக கூறப்படுகிறது. இந்த சிலையின் சிலை உயரம், 182 மீட்டர்கள். அதன் அடித்தளம் 58 மீட்டரையும் சேர்த்தால் இதன் மொத்த உயரம் 208 மீட்டர் ஆகும். 6.5 ரிக்டர் அளவுகோல் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டாலும் சேதமடையாத வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை குறித்து சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்னும் பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான சாலைகள் மற்றும் மின்சாரம் கூட இல்லாத நிலையில் ரூ.3000 கோடி செலவு செய்து பட்டேலுக்கு இந்த சிலை தேவைதானா? பட்டேல் இன மக்களின் வாக்குகளை பெறவே இவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டிருப்பதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் இரும்பு மனிதர் மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியவர் என்ற பெருமை பெற்ற சர்தார் பட்டேல் அவர்களே இன்று உயிருடன் இருந்திருந்தால் இதனை விரும்பியிருக்க மாட்டார் என்ற ரீதியில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் ஒருசிலர் இதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த சிலையை வடிவமைக்க சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த மூன்று வருடங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் உலகிலேயே உயர்ந்த சிலை இந்தியாவில் தான் உள்ளது என்ற பெருமை தற்போது கிடைத்துள்ளது இதனால் இந்த சிலையை காண உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாபயணிகள் குவிய வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய சுற்றுலாத்துறைக்கு எதிர்காலத்தில் வருமானம் அதிகரிக்கும் என்ற கருத்துக்களும் பதிவாகி வருகிறது.
இந்த சிலை குறித்து உங்கள் கருத்து என்ன என்பது குறித்து கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout