பாபா ராம்தேவ் அறிமுகம் செய்யும் புதிய சிம்கார்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி பொருட்கள் நாடு முழுவதும் பிரபலம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பாபா ராம்தேவ் தொலைத்தொடர்பு துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ள சுதேசி சம்ரதி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த சிம்கார்டில் பல சலுகைகள் உள்ளது. இந்த சிம்கார்டை பயன்படுத்தி ரூ.144க்கு ரீசார்ஜ் செய்தால் 2GB டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகள் பெறலாம். மேலும் 100 எஸ்.எம்.எஸ்கள் இலவசம்.
மேலும் இந்த சிம்கார்டை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் ஆயுள் காப்பீட்டு வசதியும் கிடைக்கும். முதல்கட்டமாக இந்த சிம்கார்டு பதஞ்சலி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மிக விரைவில் அனைவருக்கும் இந்த சிம்கார்டு கிடைக்கும் என்றும் அப்போது இந்த சிம்கார்டை வாங்கும் பொதுமக்களுக்கு பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளில் 10% சலுகை உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு முதல் பதஞ்சலி நிறுவனம் துணிகள் தயாரிப்பிலும் இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments