பாபா ராம்தேவ் அறிமுகம் செய்யும் புதிய சிம்கார்டு

  • IndiaGlitz, [Monday,May 28 2018]

பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி பொருட்கள் நாடு முழுவதும் பிரபலம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பாபா ராம்தேவ் தொலைத்தொடர்பு துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ள சுதேசி சம்ரதி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த சிம்கார்டில் பல சலுகைகள் உள்ளது. இந்த சிம்கார்டை பயன்படுத்தி ரூ.144க்கு ரீசார்ஜ் செய்தால் 2GB டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகள் பெறலாம். மேலும் 100 எஸ்.எம்.எஸ்கள் இலவசம்.

மேலும் இந்த சிம்கார்டை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் ஆயுள் காப்பீட்டு வசதியும் கிடைக்கும். முதல்கட்டமாக இந்த சிம்கார்டு பதஞ்சலி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மிக விரைவில் அனைவருக்கும் இந்த சிம்கார்டு கிடைக்கும் என்றும் அப்போது இந்த சிம்கார்டை வாங்கும் பொதுமக்களுக்கு பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளில் 10% சலுகை உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு முதல் பதஞ்சலி நிறுவனம் துணிகள் தயாரிப்பிலும் இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது

More News

'தமிழ்ப்படம் 2.0' படக்குழுவினர்கள் கலாய்ப்பது யாரை?

நடிகர் சிவா, திஷா பாண்டே நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2.0' திரைப்படம் ஏற்கனவே மே 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.

20 ஆண்டுகள் வாழ்ந்த மனைவியை பிரிந்தார் பிரபல நடிகர்

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பல், தனது மனைவியை 20 ஆண்டுகள் கழித்து பிரிய முடிவு செய்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியீடு: சீல் வைத்தார் கலெக்டர்

தூத்துகுடி மக்களின் நெடுநாளைய போராட்டம் வெற்றி காணும் வகையில் இன்று தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டுள்ளது.

கார்த்தியின் அடுத்த படத்தின் டைட்டில்?

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

'காலா' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்பட வரும் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளது.