ஆக்சிஜன் வாங்க ரூ.40 லட்சம் கொடுத்த ஆஸ்திரேலிய ஐபிஎல் வீரர்: குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்படுவதன் காரணமாக ஆக்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆக்சிஜன் வாங்குவதற்கு பலர் நிதி உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் 50 லட்ச ரூபாய் ஆக்சிஜன் வாங்குவதற்காக இந்திய அரசுக்கு நிதியாக கொடுத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருபவர் பேட் கம்மின்ஸ். இவர் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வாங்குவதற்காக பி.எம்.கேர்ஸ்க்கு 50,000 ஆஸ்திரேலிய டாலர்கள் நிதியாக வழங்கியுள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தான் இந்தியாவை மிகவும் நேசிப்பதாகவும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தனக்கு வருத்தத்தை தருவதாகவும், இந்த பணம் இந்தியாவுக்கு போதாது என்றாலும் என்னால் முயன்ற ஒரு சிறு உதவி என்றும் இதேபோல் மற்றவர்களும் நிதியுதவி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பேட் கம்மின்ஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

கீர்த்தி சுரேஷின் வேற லெவல் ஸ்டைலிஷ் லுக்: இணையத்தில் வைரல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பதும் தெரிந்ததே 

ஸ்டெர்லைட்டை தவிர வேறு நிறுவனங்களே இல்லையா? கமல்ஹாசன் கேள்வி

ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதித்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தவிர ஆக்சிஜன் தயாரிப்பதற்கு வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?

அடுத்து 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு...! முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு, முழு ஊரடங்கு என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

'அன்றே சொன்னார் ரஜினிகாந்த்' டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்து அதன் பின் திடீரென தன்னுடைய உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார்

கமல்-லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

'மாநகரம்' 'கைதி' மற்றும் 'மாஸ்டர்' ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' என்ற படத்தை இயக்க