ஆக்சிஜன் வாங்க ரூ.40 லட்சம் கொடுத்த ஆஸ்திரேலிய ஐபிஎல் வீரர்: குவியும் பாராட்டுக்கள்
- IndiaGlitz, [Monday,April 26 2021]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்படுவதன் காரணமாக ஆக்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆக்சிஜன் வாங்குவதற்கு பலர் நிதி உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் 50 லட்ச ரூபாய் ஆக்சிஜன் வாங்குவதற்காக இந்திய அரசுக்கு நிதியாக கொடுத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருபவர் பேட் கம்மின்ஸ். இவர் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வாங்குவதற்காக பி.எம்.கேர்ஸ்க்கு 50,000 ஆஸ்திரேலிய டாலர்கள் நிதியாக வழங்கியுள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தான் இந்தியாவை மிகவும் நேசிப்பதாகவும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தனக்கு வருத்தத்தை தருவதாகவும், இந்த பணம் இந்தியாவுக்கு போதாது என்றாலும் என்னால் முயன்ற ஒரு சிறு உதவி என்றும் இதேபோல் மற்றவர்களும் நிதியுதவி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பேட் கம்மின்ஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது