close
Choose your channels

திரைப்படமாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?

Sunday, May 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்ததும் இந்த படம் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பசும்பொன் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் பசும்பொன் தேவராக வேடமிட்டு நடிக்கிறார் என்பதும் இவர் இந்த படம் முடியும் வரை விரதம் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'செந்தூரபூவே' என பல வெற்றி படங்களை தந்தவர்.

தேவர் சமூகத்தை சேர்ந்த சௌத்ரி தங்கள் தேவரை போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராக படத்தில் நடிக்க கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டார். தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர் வருடா வருடம் பசும்பொன் சென்று தேவரை வணங்க கூடியவர்.

ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்பவர் பசும்பொன் தேவருடன் சிறு வயது முதல் தேவரின் அரசியலிலும் பங்கு பெற்ற தேவரின் சிஷ்யராவார். அவர் எழுதிய "முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்" என்ற புத்தகம் மூலம் வரலாறு உண்மைகள் படமாக்கபட உள்ளது. முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment