திரைப்படமாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,May 31 2020]

கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்ததும் இந்த படம் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பசும்பொன் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் பசும்பொன் தேவராக வேடமிட்டு நடிக்கிறார் என்பதும் இவர் இந்த படம் முடியும் வரை விரதம் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'செந்தூரபூவே' என பல வெற்றி படங்களை தந்தவர்.

தேவர் சமூகத்தை சேர்ந்த சௌத்ரி தங்கள் தேவரை போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராக படத்தில் நடிக்க கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டார். தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர் வருடா வருடம் பசும்பொன் சென்று தேவரை வணங்க கூடியவர்.

ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்பவர் பசும்பொன் தேவருடன் சிறு வயது முதல் தேவரின் அரசியலிலும் பங்கு பெற்ற தேவரின் சிஷ்யராவார். அவர் எழுதிய முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர் என்ற புத்தகம் மூலம் வரலாறு உண்மைகள் படமாக்கபட உள்ளது. முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளது.

More News

அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினர்: பிரபல தமிழ் இயக்குனர் கண்டனம்

அமெரிக்காவில் கடந்த வாரம் மினியாப்பொலிஸ் என்ற பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க கருப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் காலாலேயே மிதித்து கொல்லப்பட்டார்.

கொரோனா எதிரொலி: மாற்று வழியில் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் பாலியல் தொழிலாளிகள்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்க்ள் வரை பலரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே

எனக்காகவே எழுதப்பட்ட பாட்டா? விஜய்சேதுபதி பட இயக்குனர் ஆச்சரியம்

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் ஒருசில பிரச்சனை காரணமாக அந்த படம் ரிலீஸ்

14 ஆயிரத்தை நெருங்கும் சென்னை கொரோனா பாதிப்பு: ராயபுரத்தில் எவ்வளவு?

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் இன்று பேருந்து போக்குவரத்து உள்பட பல அறிவிக்கப்பட்ட தளர்வுகள் சென்னைக்கு கிடைக்கவில்லை.

14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிந்துமாதவி: ஏன் தெரியுமா?

பிரபல தமிழ் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான பிந்துமாதவி தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்