சூர்யா, சிவகார்த்திகேயனுடன் இணைந்த வெற்றிமாறன்

  • IndiaGlitz, [Saturday,November 21 2015]

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் மூன்று மாதங்களுக்கு முன்பே ரிலீஸுக்கு தயாராகிவிட்டபோதிலும், ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இந்த படம் கண்டிப்பாக ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இதே தேதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் 'பசங்க 2' படமும் ரிலீஸ் ஆகிறது. பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யா, அமலாபால் சிறப்பு தோற்றத்திலும் பிந்துமாதவி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

ரஜினிமுருகன், பசங்க 2' ஆகிய இரண்டு படங்களை அடுத்து அதே டிசம்பர் 4ஆம் தேதியில் வெற்றிமாறனின் விருதுகளை குவித்த படமான 'விசாரணை' படமும் வெளியாகவுள்ளதாக தற்போது கூறப்படுகிறது. மூன்று முன்னணி நட்சத்திரங்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் திரையுலக ரசிகர்களுக்கு டிசம்பர் 4ஆம் தேதி ஒரு முக்கிய நாளாக கருதப்படுகிறது.