மெரினா புரட்சியை கையில் எடுக்கின்றார் பாண்டிராஜ்

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த விபரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உலகையே திரும்பி பார்க்க வைத்த புரட்சி மெரினாவில் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம். இதனை மையமாக வைத்து 'மெரினா புரட்சி' என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் போஸ்டரில் இருந்தே இந்த படத்தின் கதை மெரினாவில் நடந்த புரட்சியை பற்றியது என்று தெள்ளத்தெளிவாக புரிகிறது.

பாண்டியராஜ் அவர்களின் பசங்க புரடொக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கவுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், அல்ருபியான் இசையில், தீபக் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுடன் கூடிய டிரைலர் மிக விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

More News

பணிக்கு திரும்புவோம், ஆனால் பயணிகளிடம் காசு வாங்க மாட்டோம்: போக்குவரத்து ஊழியர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். அலுவலகங்கள் சென்று வருபவர்கள், மாணவர்கள் ஆகியோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

ரஜினியின் முதல் அரசியல் மாநாடு குறித்த தகவல்

ரஜினிகாந்த் கடந்த மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அறிவித்தார்.

தோனி சாதனையை முறியடித்த இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கடந்த 5ஆம் தேதி கேப்டவுன் நகரில் தொடங்கிய

தல அஜித்துக்காக வித்தியாசமான கேரக்டர் வைத்திருக்கும் மோகன்ராஜா

சமீபத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது.

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பணிபுரியும் தற்காலிக கண்டக்டர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கண்டக்டராக பணிபுரியும்போது அவருடைய ஸ்டைலை பார்த்து தான் அவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.