'பசங்க' படத்தின் குழந்தை நட்சத்திரமா இவர்? காதலியுடன் செம போஸ்!

  • IndiaGlitz, [Wednesday,December 28 2022]

இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’பசங்க’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம் மற்றும் பாண்டியன் ஆகிய மூவரும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தனர் என்பதும் தெரிந்ததே.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற இந்த படம் வசூலை வாரி குவித்தது என்பதும் 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் ரூ.11 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டியன் ஆகிய மூவருமே தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் கிஷோர் தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கிஷோர் தற்போது இளைஞன் ஆகியுள்ள நிலையில் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ஆபீஸ்’ என்ற சீரியலில் நடித்த ப்ரீத்தி குமாரை காதலித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வரும் நிலையில் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நமது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு நாம் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடுவோம் , லவ் யூ. என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம வீடியோ வெளியிட்ட லைகா!

 மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில்

'வாரிசு - துணிவு' படங்களை அடுத்து மீண்டும் விஜய்-அஜித் படங்கள் மோதலா?

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் மற்றும் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் ஆகிய இரண்டு படங்களும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து இரண்டு படங்களின் புரமோஷன்

'மாஸ்டர்' - 'தளபதி 67' படங்களில் உள்ள முக்கிய வித்தியாசம்: லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் வீடியோ

பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நுழையும் வீடியோ சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் புதிய இணையத்தொடர்;  'ஆர் யா பார்' டிரைலர் ரிலீஸ்

உயிர், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தை கண்முன் நிறுத்தும்  'ஆர் யா பார்' இணையதொடர் டிசம்பர் 30, 2022 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம்