close
Choose your channels

'பசங்க 2' ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா?

Friday, November 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த 'பசங்க 2' மற்றும் '24' ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'பசங்க 2' திரைப்படம் நவம்பர் 27ஆம்தேதி ரிலீஸ் ஆகும் என செய்திகள் வெளியாகியது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி 'பசங்க 2' திரைப்படம் டிசம்பரில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் நவம்பர் 27-ல் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்த மற்றொரு படமான '144' திரைப்படத்தின் ரிலீஸில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே பாண்டியராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு' திரைப்படமும் டிசம்பரில் ரிலீஸ் ஆகும் என கூறப்படும் நிலையில், அவர் இயக்கிய மற்றொரு படமான 'பசங்க 2' படமும் அதே மாதத்தில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment