பசங்க 2' படத்திற்கு 10 வயதுக்குட்பட்ட பசங்களுக்கு இலவசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலாபால் சிறப்பு தோற்றத்தில் நடித்த கடந்த 'பசங்க 2' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. வரும் பொங்கல் தினம் வரை சென்னை உள்பட அனைத்து நகர திரையரங்குகளிலும் இந்த படம் நல்ல வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கான படமான இந்த படத்தை அனைத்து குழந்தைகளும் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கம் காரணமாக கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் 10 வயதுக்குட்பட்ட பசங்களுக்கு இலவச அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான இன்றும் நாளையும் அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சில படங்களுக்கு இதேபோல் சிறுவர்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com