தனுஷ் விவகாரம்: நயன்தாராவுக்கு ஆதரவாக இருந்தது ஏன்? பிரபல நடிகை விளக்கம்..!

  • IndiaGlitz, [Thursday,November 28 2024]

தனுஷ் மற்றும் நயன்தாரா விவகாரத்தில் சில நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில், அவர்களில் ஒருவரான நடிகை பார்வதி, நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் என்பதை விளக்கம் அளித்துள்ளார்.

நயன்தாராவின் திருமண வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில், நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை தனுஷ் தர மறுத்ததாகவும், அவருடைய அனுமதி இல்லாமல் அந்த காட்சிகளை பயன்படுத்தியதற்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல் வெளிவந்தது.

இந்த விவகாரத்தில், நயன்தாரா சமூக வலைதளங்களில் மூன்று பக்க அறிக்கை வெளியிட்டார், அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தனுஷ் உடன் நடித்த சில நடிகைகளே நயன்தாராவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை பார்வதி, நயன்தாராவின் அறிக்கையை பகிர்ந்து ஆதரவு தெரிவித்தார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

நயன்தாராவின் பதிவை பார்த்தவுடன் அதை பகிர வேண்டும் என எனக்கு தோன்றியது. தன்னை செதுக்கிக் கொண்டு, லேடிஸ் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கடின உழைப்பின் மூலம் பெற்றவர். எனவே அவரது மூன்று பக்க அறிக்கையை பகிர வேண்டும் என்று எண்ணினேன். காரணமின்றி அவர் நேர்காணல் கொடுப்பதில்லை. அனுபவித்த வருத்தங்களை மூன்று பக்கத்தில் எழுதியுள்ள நிலையில், அந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருப்பதே சரியானது என்று நினைத்தேன். உண்மையாகவே, அவர் ஒரு பிரச்சனையை சந்திக்கும் போது அவருக்கு துணையாக இருப்பது ஒரு மதிப்பு மிகுந்த செயல் என எனக்குத் தெரிந்தது. அதனால் தான் அவர் செய்தது சரியானது என பகிர்ந்தேன், என்று பார்வதி கூறினார்.

நடிகை பார்வதியின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'போக்கிரி' 'பில்லா' நடிகருக்கு 47 வயதில் திருமணம்.. பல் டாக்டரை மணந்தார்..!

விஜய் நடித்த 'போக்கிரி', அஜித் நடித்த 'பில்லா' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர், 47வது வயதில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

'பிரதர்' உள்பட 6 திரைப்படங்கள்.. ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் செம்ம குஷி..!

ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' திரைப்படம் உள்பட ஐந்து திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'சிறகடிக்க ஆசை' வெற்றி வசந்த் திருமணம்.. தாலி கட்டியவுடன் கொடுத்த அன்பு முத்தம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நாயகனாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெற்றி வசந்தின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து,

மாறி மாறி வாழ்த்து சொல்லும் அஜித் - உதயநிதி.. எதிர்கால திட்டம் என்ன?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு துபாயில் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

த்ரிஷாவுக்கு இன்னொரு சூப்பர்ஹிட் படம்.. 2ஆம் பாகமாகும் காவிய திரைப்படம்..!

ஏற்கனவே நடிகை த்ரிஷா தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வரும் நிலையில், அவரது சூப்பர்ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.