தனுஷ் விவகாரம்: நயன்தாராவுக்கு ஆதரவாக இருந்தது ஏன்? பிரபல நடிகை விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் மற்றும் நயன்தாரா விவகாரத்தில் சில நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில், அவர்களில் ஒருவரான நடிகை பார்வதி, நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் என்பதை விளக்கம் அளித்துள்ளார்.
நயன்தாராவின் திருமண வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில், "நானும் ரவுடிதான்" படத்தின் காட்சிகளை தனுஷ் தர மறுத்ததாகவும், அவருடைய அனுமதி இல்லாமல் அந்த காட்சிகளை பயன்படுத்தியதற்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல் வெளிவந்தது.
இந்த விவகாரத்தில், நயன்தாரா சமூக வலைதளங்களில் மூன்று பக்க அறிக்கை வெளியிட்டார், அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தனுஷ் உடன் நடித்த சில நடிகைகளே நயன்தாராவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை பார்வதி, நயன்தாராவின் அறிக்கையை பகிர்ந்து ஆதரவு தெரிவித்தார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
"நயன்தாராவின் பதிவை பார்த்தவுடன் அதை பகிர வேண்டும் என எனக்கு தோன்றியது. தன்னை செதுக்கிக் கொண்டு, லேடிஸ் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கடின உழைப்பின் மூலம் பெற்றவர். எனவே அவரது மூன்று பக்க அறிக்கையை பகிர வேண்டும் என்று எண்ணினேன். காரணமின்றி அவர் நேர்காணல் கொடுப்பதில்லை. அனுபவித்த வருத்தங்களை மூன்று பக்கத்தில் எழுதியுள்ள நிலையில், அந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருப்பதே சரியானது என்று நினைத்தேன். உண்மையாகவே, அவர் ஒரு பிரச்சனையை சந்திக்கும் போது அவருக்கு துணையாக இருப்பது ஒரு மதிப்பு மிகுந்த செயல் என எனக்குத் தெரிந்தது. அதனால் தான் அவர் செய்தது சரியானது என பகிர்ந்தேன்," என்று பார்வதி கூறினார்.
நடிகை பார்வதியின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout