நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,December 03 2020]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்து வருவது போல் தற்போது நடிகை பார்வதி நாயரும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு ’ரூபம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் பார்வதி நாயர் கண்ணாடி முன் நிற்பது போன்றும் கண்ணாடியில் தோன்றும் பிம்பம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கையை வெளியே நீட்டி இருப்பது போன்றும் பின்னணியில் ஒரு பேய் இருப்பது போன்றும் அட்டகாசமாக உள்ளது.

ஜிப்ரான் இசையில், சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், சரத்குமார் படத்தில் உருவாகும் இந்த படத்தை தாமரைசெல்வன் என்பவர் இயக்க உள்ளார். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.