நடிகை பார்வதி மேனனுக்கு தேசிய விருது

  • IndiaGlitz, [Friday,April 13 2018]

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான 65வது தேசிய திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது..

இதன்படி சிறந்த படமாக அஸ்ஸாம் மொழிப்படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற படம் தேர்வு பெற்றுள்ளது. அதேபோல் டேக் ஆப்' என்ற  மலையாள படத்தில் நடித்த பார்வதி மேனனுக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த மலையாள மொழி படமாக தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் ('Thondimuthalum Driksakshiyum') என்ற படம் தேர்வு பெற்றுள்ளது.

மற்ற விருதுகள் குறித்த தகவல்கள் இன்னும் ஒருசில நிமிடங்கள் வெளிவரவுள்ளதால் இதே பக்கத்தில் தொடர்ந்து காத்திருங்கள்