பருந்தாகுது ஊர்க்குருவி': ஒரே நாளில் நடந்த உண்மைக்கதை!

  • IndiaGlitz, [Wednesday,October 05 2022]

லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ருஸ்ஸோ மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

‘வஞ்சகமும் தீமையும் அழியும்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் இளம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட திரைப்படம். நடிகர் ஆர்யா, இயக்குனர் மாரி செல்வராஜ், நகைச்சுவை நடிகர் சதீஷ் போன்ற தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்களால் சமீபத்தில் வெளியான டீசர் வெளியானது.

இந்த படம் குறித்து இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் கூறுகையில், கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவன் காட்டுக்குள் பதுங்கியிருக்கும் நிலையில் அங்கு இளைஞன் ஒருவனுடன் நட்பு ஏற்படுகிறது. அதனை அடுத்து அந்த காட்டுக்குள் நிகழ்ந்தது என்ன? எதிரிகளிடம் இருவரும் சிக்கினார்களா? அல்லது எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம்.

இந்த படத்தின் கதை இந்தியாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ளோம். ஊட்டி மற்றும் முதுமலை காடுகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு த்ரில் அனுபவத்தை வழங்கும்.

நிஷாந்த் ருஸ்ஸோ மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் ​​மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி காயத்ரி ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். ராட்சசன் புகழ் வினோத் சாகர், கோடாங்கி வடிவேல், அருள் டி ஷங்கர், இ ராமதாஸ், கௌதம் செல்வராஜ், ஆனந்த், சுந்தர்ராஜன், ஆதிக் & ராஜேஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இயக்குனர் ராமின் முன்னாள் உதவியாளர் தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குகிறார். லைட்ஸ் ஆன் மீடியா இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

More News

'பொன்னியின் செல்வன்' பார்த்து ரஜினி, ஷங்கர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வைரல் டுவிட்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் ஹீரோ இல்ல, அப்ப யாரு ஹீரோ? எஸ்.ஏ.சி பகிர்ந்த தகவல்!

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவார் என்று கூறப்படும் நிலையில் அவர் இயக்கும் முதல் படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிப்பார்

'மர்மதேசம்' தொடரின் குழந்தை நட்சத்திரம் திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் சின்னத்திரையுலகம்!

சன் டிவியில் கடந்த 1996ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'மர்மதேசம்' என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் திடீரென தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

'பிரின்ஸ்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை

'பொன்னியின் செல்வன்' நான்கு நாட்கள் வசூல்.. இந்த வாரத்திற்குள் ரூ.500 கோடியை எட்டுமா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது