சீட்டுக்கட்டுப் போல சரிந்த 12 மாடி கட்டிடம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்!
- IndiaGlitz, [Friday,June 25 2021]
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரைக்கு அருகே நேற்று நள்ளிரவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென விழுந்து சரிந்து இருக்கிறது. இதனால் அந்தக் கட்டிடத்தில் இருந்த 102 பேர் உயிரிழந்து விட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மியாமி கடற்கரைக்கு மிக அருகில் இருக்கும் 12 மாடி கட்டிடம் ஒன்று நேற்று நள்ளிரவில் திடீரென சரிந்து விழுந்ததில் 102 பேர் உயிரிழந்து விட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அந்தக் கட்டிடத்தில் பலர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும்பணி நேற்று நள்ளிரவு முதலே நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கட்டிடம் விழுந்து நொறுங்கியதில் அந்தப் பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
மியாமி கடற்கரைக்கு மிக அருகில் இருக்கும் கட்டிடம் திடீரென சரிந்து விழுந்து இருக்கிறது. இதற்கு கடல் அரிப்பு காரணமாக இருக்குமோ என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில் இந்தக் கட்டிடம் கட்டி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு பணிகள், கான்கிரீட் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் சமீபத்தில் கூட இந்தக் கட்டிடத்தை புணரமைக்கும் பணி நடைபெற்றதாகவும் அந்த ஊர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
திடீரென குடியிருப்பு கட்டிடம் சரிந்து விழுந்ததில் அந்தக் கட்டிடத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது உயிரிழந்த விட்டனர். மேலும் அதில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க வரலாற்றிலேயே இது பெரிய துயரமான சம்பவம் என்றும் புளோரிடா மாகாண மேயர் வருத்தம் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.