வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு 'மனக்களிம்பு' போடும் பார்த்திபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக நடிகர், இயக்குனர் என வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்.பார்த்திபன் மற்ற நடிகர்களிடம் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர். தனது படங்கள், சொந்த வாழ்க்கையில் மட்டுமின்றி வெள்ள நிவாரண பணியிலும் தனது வித்தியாசத்தை நிரூபித்துள்ளார். அனைத்து நடிகர்களும் உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்ககையில் பார்த்திபன் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தண்ணீரில் இறங்கி ப்ளீச்சிங் பவுடரை தெளித்து சுகாரதாரத்திற்கு உதவினார்.
இந்நிலையில் நாளை அதாவது டிசம்பர் 13ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு 'மனக்களிம்பு' (மருத்துவமுகாம்)போட பார்த்திபனின் மனிதநேய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மருத்துவமுகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நல ஆலோசனைகள், இரத்த தான முகாம்கள் மற்றும் ஊக்க உணவுகள் அளிக்கப்படவுள்ளன.
சென்னை வடபழநி கமலா திரையரங்கம் அருகில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் இந்த மனக்களிம்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 044-23651311 மற்றும் 9566049610 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com