பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் !!
Send us your feedback to audioarticles@vaarta.com
Do. Creative Labs தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் Scaler நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கத்தில், ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில் இருவர்’. வரும் பிப்ரவரி 25 முதல் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.
கோடியில் இருவர் சீரிஸின் ட்ரெய்லர் வெளியான நிலையில், ரசிகர்கள் பெரும் வரவேற்பு தந்து, கொண்டாடி வருகின்றனர். இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரெய்லர் யூடியூப் தளத்தில், டிரெண்டாகி வருகிறது.
தமிழக யூடியூப் காமெடி வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி சுதாகர், முதல் முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் பரபரப்பான திரைக்கதையில், உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன், லைவ் லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் வாழும் இரு இளைஞர்கள் கிராம வாழ்வின் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பெங்களூர் பயணித்து அங்கு ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க முனைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரிஸின் கதை. ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட் அப் தொடங்க ஆசைப்படும் இளைஞர்கள் என இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்வோடு எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையிலான திரைக்கதையுடன், நகைச்சுவை கலந்து, அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம், கலக்கல் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
ஸ்டார்ட் அப் துறை பற்றி வரும் பல தொடர்கள் போல அல்லாமல், அந்த துறையின் பின்னணியை முழுக்க முழுக்க உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லும் வகையில், மிகுந்த ஆராய்ச்சிகள் செய்து, அத்துறை வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த சீரிஸின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு ஒரு முழுமையான சிரீஸில் நடித்திருக்கும் கோபி, சுதாகர் தங்கள் முத்திரை காமெடியில் ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்பது டிரெய்லரில் தெளிவாகத் தெரிகிறது.
இதுவரையிலும் பெரிய ஓடிடி தளங்கள் மட்டுமே முயற்சித்து வரும் தரத்தில், முதல் முறையாக யூடியூப் தளத்திற்காக உச்சகட்ட தரத்தில், இந்த “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.
இந்த சீரிஸில் கோபி, சுதாகர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அஜய் ரத்தினம், டிராவிட் செல்வம், செல்லா, விவேக் RV, நித்யஸ்ரீ, ராம்குமார் அண்ணாச்சி, ஆல்பர்ட் அஜய், அஸ்வத் போபோ, அர்ஜுன் மனோகர் , வெட்டிபையன் வெங்கட் & நிறைமதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெங்களூருவில் பல JordIndian வீடியோக்களை இயக்கிய ஷாகித் ஆனந்த் இந்த சீரிஸினை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இந்த சீரீஸ் டைட்டில் பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.
போரிஸ் கென்னத் & ரோஹித் சுப்ரமணியன், டானில்லா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்த சீரிஸிக்கு கதை எழுதியுள்ளனர். ரோஹித் சுப்ரமணியன் & போரிஸ் கென்னத் ஆகியோர் வசனங்கள் எழுதியுள்ளனர்.
Do. Creative Labs பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த சீரிஸை, பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் Scaler இணைந்து வழங்குகிறது. ஆனந்த் அகல்வாடி, போரிஸ் கென்னத், ரோஹித் சுப்ரமணியன், டான்னிலா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இந்த வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல், 5 நாட்களுக்கு ஒரு எபிஸோடாக பரிதாபங்கள் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com