விவேகத்தை விட அஜித் பெரிசு: 'மெர்சல்' சர்ச்சைக்கு பார்த்திபன் பதில்
- IndiaGlitz, [Tuesday,August 22 2017]
எந்த ஒரு திரைப்படத்தின் விழாக்களிலும் நடிகர், இயக்குனர் பார்த்திபன் கலந்து கொண்டு அவரது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார். அதேபோல் சமீபத்தில் நடந்த தளபதி விஜய்யின் 'மெர்சல் இசை வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.
ஆனால் இந்த விழாவில் அவரது பேச்சு சிரிப்பை வரவழைப்பதற்கு பதிலாக சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் அவர் பேசியதாகவும் விமர்சிக்கப்பட்டது. பொடிமாஸ் செய்யணும்னா முட்டை வேணும், மாஸ் படத்திற்கு விஜய் மட்டும் தான் வேண்டும் என்று சம்மந்தம் இல்லாமல் பேசிய பார்த்திபன், ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு, CM, டிரம்ப் டுவீட் ஆகியவை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவரை பார்த்திபன் பேசிய பேச்சுக்களில் இதுதான் மோசமானது என்று பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து அவர் கவிதை வடிவில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
'காசுக்கு மாரடிக்காத
Mass-ஆன பேச்சுக்கு
மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது
இதுவே முதன்முறை!
வாயார/மனதார வாழ்த்துவது
என் மேடை நாகரீகம்.
அவர் அழைத்தாலும்
தலை நிமிர இப்படி சொல்வேன்.
"வேகத்தை விட விவேகம் பெருசு-ஆனா
விவேகத்தை விட
அஜீத்தே பெருசு!"-நான்
கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால்,
சினிமாவுக்கு மட்டுமே ரசிகன். 'ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?)
வாழப்போறான் விவசாயி'-அதுவே
நம்பிக்கை நிறைந்த என் பேச்சின்
மெரஸலான மெசேஜ்!"
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.