பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 14 2017]

பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர் நடித்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம் இன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவருகிறது. இந்த படத்தின் முன்பதிவுகள் திருப்திகரமாக இருப்பதால் இந்த பொங்கல் விடுமுறையில் நல்ல ஓப்பனிங் வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டு, டைட்டிலுடன் கூடிய போஸ்டரும் வெளிவந்துள்ளது. பார்த்திபனின் அடுத்த படத்தின் டைட்டில் 'முன்பதிவாய் ஒரு முத்தம்' என்பதுதான். பொதுவாக பார்த்திபன் பட டைட்டில் கவிதை வடிவில் இருக்கும் என்பதை இந்த டைட்டிலும் உறுதி செய்துள்ளது.

இன்று பூஜையுடன் தொடங்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.