ஏ.ஆர்.ரஹ்மான் டியூனுக்கு பாடல் எழுதிய பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் கம்போஸ் செய்த டியூனுக்கு ஒரு பாடலை எழுதியதாக பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மிகுந்த பரவசத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தற்போது ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் உலகிலேயே முதன் முதலாக உருவாகும் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்து வருகிறார் என்பதும் ஏற்கனவே அவர் மூன்று பாடல்களை கம்போஸ் செய்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் புதிதாக கம்போஸ் செய்த பாடல் ஒன்றுக்கு பாடல் வரிகள் எழுதி தரும்படி தன்னிடம் அனுப்பியதாகவும் அந்த டியூனை கேட்டு தான் பரவசம் அடைந்ததாகவும் இந்த படத்தில் உள்ள முழு கதையையும் அந்த பாடலில் கொண்டு வரும் அளவுக்கு ஒரு வாரம் கால அவகாசம் எடுத்து அந்த பாடலை எழுதி உள்ளதாகவும் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
இரவின் நிழல்’-ஏ ஆர் ரஹ்மான் இசை ம்யூரல்! பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது. சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல், முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு (திரைக்கு) வரும்போது ருசிக்கும்.
‘இரவின் நிழல்’-ஏ ஆர் ரஹ்மான் இசை ம்யூரல்!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 25, 2021
பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார்.கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க,
Conti… pic.twitter.com/0qlAqYbzDq
Conti..
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 25, 2021
பதிவும் செய்யப்பட்டது.சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல்,முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில்.ரசித்து சமைத்தால் தானே இலைக்கு(திரைக்கு)வரும்போது ருசிக்கும். pic.twitter.com/QK12PVvb5T
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments