தளபதி சந்திப்புக்கு பின் பார்த்திபன் எழுதிய கவிதை

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

பிரபல இயக்குனர் பார்த்திபன் அவர்களின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதை அடுத்து அவர் கமல், ரஜினி உள்பட திரையுலக பிரபலங்களை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் தளபதி விஜய்யை பார்த்திபன் அவருடைய வீட்டில் சந்தித்து தன்னுடைய மகள் திருமணத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது விஜய்யின் தாயார் ஷோபா அவர்களும் உடனிருந்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் எழுதிய கவிதை பின்வருமாறு:

உயரம் எப்படி ஆழத்தில்?
அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!
அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம்.
சிரிப்பில் கூட இதயம் விஜயம்!
மகனின் பெருமை பூரிப்பாக,
ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!