பார்த்திபனின் அடுத்த படத்தில் சதீஷ் நாயகியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது. பார்த்திபனின் அடுத்த படம் ரொமான்ஸ் படமாக இருக்கும் என்றும் அந்த படத்திற்கு 25 வயது நாயகி தேவை என்றும் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது, ‘வணக்கம்! அடுத்தது பற்றி நிறைய ஓடுகிறது மனதில்,அதில் ஒரு ஸ்கிரிப்டுக்கு Fitness freak -ஆன 25 வயது பெண் (சிரித்தால்... சில பசங்களையாவது சீரியஸாக்கி I c u- க்கு அனுப்பக்கூடிய) நடித்து அனுபவமுள்ளவர் தேவை என்று பார்த்திபன் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.
பார்த்திபனின் இந்த டுவீட்டுக்கு பதில் அளித்துள்ள காமெடி நடிகர் சதீஷ், ‘தான் பெண் வேடமிட்ட ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ’என்ன சார் ஓகேவா? என்று காமெடியாக கேள்வி எழுப்பியுள்ளார். சதீஷின் இந்த பதிவுக்கு சுவாரஸ்யமான கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது. நக்கல் மன்னனான பார்த்திபன் சதீஷின் டுவீட்டுக்கு என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வணக்கம்!
— R.Parthiban (@rparthiepan) September 28, 2019
அடுத்தது பற்றி நிறைய ஓடுகிறது மனதில்,அதில் ஒரு ஸ்கிரிப்டுக்கு
Fitness freak -ஆன 25 வயது பெண் (சிரித்தால்... சில பசங்களையாவது சீரியஸாக்கி
I c u- க்கு அனுப்பக்கூடிய) நடித்து அனுபவமுள்ளவர் தேவை.
Contact karthi 9176734449 pic.twitter.com/VTzzZ5rL2F
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com