துக்ளக் தர்பார் பிரச்சனை: சீமானை சமாதானம் செய்ய பார்த்திபன் செய்த முயற்சி!
- IndiaGlitz, [Wednesday,January 13 2021]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் நடித்த ’துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான போது அதில் பார்த்திபனின் அரசியல்வாதி கேரக்டர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்று இருந்ததாகவும் அவரது கட்சியை கேலி செய்யும் வகையில் இருந்ததாகவும் நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறினார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் இந்த படம் வெளியாகும் போது நாம் தமிழர் கட்சியினரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் சீமானை சமாதானப்படுத்த கூறியிருப்பதாவது:
நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. (புதிய பாதை நமது) இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்’நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
பார்த்திபனின் இந்த சமாதானத்தை சீமானும் அவரது கட்சியினர்களும் ஏற்று கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல>> pic.twitter.com/wNSqUmncIW
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 13, 2021
<< சார்ந்தவனல்ல.(புதிய பாதை நமது)இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்’நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன்.எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர்பிரச்சனையை இயக்குனரிடம் கூறி,ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன் pic.twitter.com/4VkBClaZlG
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 13, 2021