மணிரத்னம் ஆயிரம் கேட்பாரு, குடுக்க முடியுமா? கமல்ஹாசனிடம் பார்த்திபன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் ஆயிரம் கேட்பார் கொடுக்க முடியுமா? உங்களிடம் இருக்கிறது கொடுக்குறீங்க’ என்று நகைச்சுவையுடன் கமல்ஹாசன் உடன் பேசியதை நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் நினைவு கூர்ந்து உள்ளார்.
கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பிரபலங்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. இந்த விருந்தில் அமீர்கான், சூர்யா, குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த விருந்தில் கலந்து கொண்ட நடிகர், இயக்குனர் பார்த்திபன், கமல்ஹாசன் உடன் நடந்த சிறு உரையாடல் குறித்து தெரிவித்தார். ’தக் லைப்’ படத்தில் நீங்க யூஸ் பண்ணின டோன் நல்லா இருக்கு என்று நான் கூறியவுடன், மணி தான் இதற்கு காரணம், வேறு டோன் குடுங்க என்று கேட்டார், கொடுத்தேன் என்று கூறினார்.
அப்போது நான் ’அவர் ஆயிரம் கேட்பார் சார், கொடுக்க முடியுமா? உங்ககிட்ட இருக்கு, கொடுக்க, அதனால கேட்டு வாங்கிவிட்டார்’ என்று கூறியவுடன் அவர் மெலிதாக சிரித்தார் . இன்னும் சிரிக்க சிரிக்க நிறைய பேசினோம்.
கடைசி மூச்சு வரை சினிமாவில் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை இந்த சந்திப்பு எனக்கு ஏற்படுத்தியது’ என்று கமல்ஹாசன் உடனான சந்திப்பு குறித்து நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
திரைப்படங்கள் ரிலீஸான தேதியுண்டு.ஒரு சினிமாவே ரிலீஸான தேதியின்று.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 7, 2023
வாழ்த்த சென்றவன் வாயடைத்து நின்றேன்.
Thug life’
“இந்தப் படத்துல நீங்க use பண்ணியிருக்க tone நல்லாயிருக்கு” என்றேன்.
“Mani was very particular, வேற tone குடுங்கன்னு கேட்டாரு”- birthday baby
“அவரு ஆயிரம் கேப்பாரு… pic.twitter.com/cY1VLKjmu7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments