மணிரத்னம் ஆயிரம் கேட்பாரு, குடுக்க முடியுமா? கமல்ஹாசனிடம் பார்த்திபன்..!

  • IndiaGlitz, [Tuesday,November 07 2023]

மணிரத்னம் ஆயிரம் கேட்பார் கொடுக்க முடியுமா? உங்களிடம் இருக்கிறது கொடுக்குறீங்க’ என்று நகைச்சுவையுடன் கமல்ஹாசன் உடன் பேசியதை நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் நினைவு கூர்ந்து உள்ளார்.

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பிரபலங்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. இந்த விருந்தில் அமீர்கான், சூர்யா, குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த விருந்தில் கலந்து கொண்ட நடிகர், இயக்குனர் பார்த்திபன், கமல்ஹாசன் உடன் நடந்த சிறு உரையாடல் குறித்து தெரிவித்தார். ’தக் லைப்’ படத்தில் நீங்க யூஸ் பண்ணின டோன் நல்லா இருக்கு என்று நான் கூறியவுடன், மணி தான் இதற்கு காரணம், வேறு டோன் குடுங்க என்று கேட்டார், கொடுத்தேன் என்று கூறினார்.

அப்போது நான் ’அவர் ஆயிரம் கேட்பார் சார், கொடுக்க முடியுமா? உங்ககிட்ட இருக்கு, கொடுக்க, அதனால கேட்டு வாங்கிவிட்டார்’ என்று கூறியவுடன் அவர் மெலிதாக சிரித்தார் . இன்னும் சிரிக்க சிரிக்க நிறைய பேசினோம்.

கடைசி மூச்சு வரை சினிமாவில் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை இந்த சந்திப்பு எனக்கு ஏற்படுத்தியது’ என்று கமல்ஹாசன் உடனான சந்திப்பு குறித்து நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

More News

சூப்பர் ஹிட் படத்தின் 2 ஆம் பாகத்தில் அனுஷ்கா? 50 வது படமாக அமையுமா?

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' 'பாகுபலி 2' ஆகிய படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா தனது 50வது படமாக சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் பட இயக்குனர் சாலை விபத்தில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் முதல் முறையாக ஹீரோவாக நடித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சாலை விபத்தில் மரணமடைந்த தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

நைட்டுக்கு மாயா வேணுமா பிராவோ: பூர்ணிமாவின் அதிர்ச்சி கேள்வி

பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று  பிரதீப் மீது குற்றஞ்சாட்டி வெளியே அனுப்பி வைத்த மாயா மற்றும் பூர்ணிமா குரூப் தற்போது எல்லை மீறி இரட்டை அர்த்தங்களில் ஆண்களிடம் பேசுவது பெரும்

விச்சுவாவது கிச்சுவாவது உனக்கெல்லாம் இனிமேல் மரியாதையே கிடையாது.. பயங்கர கோபத்தில் பூர்ணிமா

விச்சுவாவது கிச்சுவாவது உனக்கெல்லாம் இனிமேல் மரியாதையே கிடையாது என மாயாவிடம் பூர்ணிமா பயங்கர கோபத்துடன் கூறிய காட்சியின் வீடியோ மூன்றாவது புரமோவாக வெளியாகி உள்ளது.

ராஷ்மிகாவின் போலி வீடியோ.. 3 ஆண்டுகள் சிறை.. மத்திய அரசு அதிரடி..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது போன்ற போலி வீடியோக்களை வெளியிட்டால் இனிமேல்