கமல் தோல்வி குறித்து தனது பாணியில் டுவிட் போட்ட பார்த்திபன்!

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அவர் நிச்சயம் அந்த தொகுதியில் வெல்வார் என்றும் முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் எம்எல்ஏவாக செல்வார் என்றும் அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்

அந்த வகையில் நேற்று முடிவுகள் வெளியாக தொடங்கிய போது ஆரம்பத்தில் சில மணி நேரம் கமல்ஹாசன் முன்னிலையில் இருந்தார். அதனால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இறுதியில் அவர் தோல்வி அடைந்தார். சுமார் 1700 வாக்கு வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கமல்ஹாசனின் தோல்வியை திரையுலகின் தோல்வி என பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது பாணியில் கமல் தோல்வி குறித்து பதிவு செய்த டுவிட் பின்வருமாறு:

திரு கமல் அவர்களின் வெற்றி என்பது.... வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்)
வாங்காமல், வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே.

More News

குமரியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த்: குவியும் திரையுலகினர்களின் வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் காலியாக இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே

முதல்வர் பொறுப்பேற்றதும் ஸ்டாலின் போடப்போகும் முதல் கையெழுத்து என்ன?

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் முதல்முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்

தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடையட்டும்: திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி எதிர்க்கட்சியாக இருக்க போகிறது

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தோல்வி: வாக்கு வித்தியாசம் இவ்வளவுதானா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் சுமார்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில் காலை முதலே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வந்தன