காமெடி சென்ஸ்சுக்கு அளவே இல்லை: போலீஸ் புகார் குறித்து பார்த்திபன் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,May 09 2019]
நடிகர், இயக்குனர் பார்த்திபனின் உதவியாளர் ஜெயங்கொண்டான் என்பவர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக இன்று போலீஸ் புகார் அளித்தார். இதுகுறித்த செய்தி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெவ்வேறு தலைப்புகளில் இடம்பெற்றது.
இந்த நிலையில் இந்த செய்திகள் குறித்து நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'பார்த்திபன் கொலை செய்ய முயற்சி' Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது! என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி, இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய, அது எல்லா ஊடகங்களிலும் வர, கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி! என்று பதிவு செய்துள்ளார்.
பார்த்திபன் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போன நகைகள் குறித்து சந்தேகத்தின் பேரில் அவருடைய உதவியாளர் ஜெயங்கொண்டான் விசாரணை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
'பார்த்திபன் கொலை செய்ய முயற்சி' Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர்.
— R.Parthiban (@rparthiepan) May 9, 2019
மகிழ்ச்சி!