தமிழ் திரையுலகில் விரைவில் இடியுடன் கூடிய மழை: சிம்பு குறித்து பார்த்திபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக சிம்பு மற்றும் பார்த்திபன் நடித்து வந்த போதிலும் இருவரும் இன்னும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் விரைவில் இருவரும் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் அந்த திரைப்படம் இடியுடன் கூடிய மழையாக இருக்கும் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: ’சுயம்பு சிம்பு பற்றிய என் உளப்பூர்வ பாராட்டு அவருக்கு எட்ட, அன்று இரவு 8 மணிக்கு அவரின் உதவியாளர் ஒரு பூங்கொத்தும், சாக்லேட்டுமாக வந்தார். மிஸ்டர் சிம்பு தொலைபேசியில் நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் என் எண்ணப்புத்தகத்தில். எனக்கு ஆச்சரியமா இருக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஏன் இன்னும் வொர்க் பண்ணலைன்னு என்று ஆதங்கப்பட்டார். அதாகப்பட்டது விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்’ என்று பார்த்திபன் கூறியுள்ளார்.
சிம்பு, பார்த்திபன் இணையும் இந்த படம் குறித்த அறிவிப்பை இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இருவருமே நக்கல், நையாண்டி மற்றும் ஆக்சன்களுக்கு பெயர் போனவர்கள் என்பதால் இப்படி ஒரு படம் உருவானால் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சுயம்பு’சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட,உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார்.Mr Simbu நன்றியதில் Mr பண்பு ஆனார் எண்ணப்புத்தகத்தில்! “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் workபண்ணலேன்னு”
— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 9, 2020
அதாகப்பட்டது.... விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!! pic.twitter.com/x1d3n7qU2c
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com