தமிழ் திரையுலகில் விரைவில் இடியுடன் கூடிய மழை: சிம்பு குறித்து பார்த்திபன் 

  • IndiaGlitz, [Sunday,August 09 2020]

தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக சிம்பு மற்றும் பார்த்திபன் நடித்து வந்த போதிலும் இருவரும் இன்னும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் விரைவில் இருவரும் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் அந்த திரைப்படம் இடியுடன் கூடிய மழையாக இருக்கும் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: ’சுயம்பு சிம்பு பற்றிய என் உளப்பூர்வ பாராட்டு அவருக்கு எட்ட, அன்று இரவு 8 மணிக்கு அவரின் உதவியாளர் ஒரு பூங்கொத்தும், சாக்லேட்டுமாக வந்தார். மிஸ்டர் சிம்பு தொலைபேசியில் நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் என் எண்ணப்புத்தகத்தில். எனக்கு ஆச்சரியமா இருக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஏன் இன்னும் வொர்க் பண்ணலைன்னு என்று ஆதங்கப்பட்டார். அதாகப்பட்டது விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்’ என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

சிம்பு, பார்த்திபன் இணையும் இந்த படம் குறித்த அறிவிப்பை இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இருவருமே நக்கல், நையாண்டி மற்றும் ஆக்சன்களுக்கு பெயர் போனவர்கள் என்பதால் இப்படி ஒரு படம் உருவானால் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More News

உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்கள்: குவியும் பாராட்டுக்கள்

உயிர் மற்றும் மானத்தை பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை மூன்று பெண்கள் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ!

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கேரள ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் வரும் காலங்களில் கதையை தேர்வு செய்வேன் என்று கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார் 

கமல் பாடலை ரிலீஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்!

உலகநாயகன் கமலஹாசன், அமலா நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய திரைப்படம் 'சத்யா'.

லெபனான் வெடிவிபத்து ராக்கெட் வீசியதால் ஏற்பட்டு இருக்கலாம்… பகீர் தகவலை வெளியிட்ட அந்நாட்டின் அதிபர்!!!

கடந்த செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 5) லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் அருகேயுள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட ஒரு வெடிவிபத்தால் இதுவரை 157 பேர் உயிழந்துள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி: பரபரப்பு தகவல்

கொரானா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு காலத்தில் நடிகர் நடிகையர் படப்பிடிப்பு இல்லாமல்