வீழ்வேனென்று நினைத்தாயோ! சென்னைக்கு கம்பீரமாக குரல் கொடுத்த பார்த்திபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
வந்தாரை வாழவைக்கும் சென்னை தற்போது கொரோனா வைரஸால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதும், சென்னையில் சுமார் 2000 பேர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சென்னையில் இருந்து தப்பித்தால் போதும் என்று கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஒரு சென்னையை விட்டு சொந்த ஊருக்குச் சென்றனர் என்பதும் இருப்பினும் கனத்த மனதோடு சென்னையில் இருந்து வெளியேற மனமே இல்லாமல் தான் அவர்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை இதுபோன்ற பல இடர்பாடுகளை சந்தித்த போதிலும் அதிலிருந்து உடனடியாக மீண்டு வந்துள்ளது என்பது சென்னையின் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும். அந்த வகையில் சென்னை இந்த கொரோனா வைரஸில் இருந்தும் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’நான் சென்னை’ என்று சென்னை பேசுவது போல் ஒரு கவிதையை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது கம்பீர குரலில் பேசியுள்ளார், அந்த கவிதை இதோ:
தடைகள் ஆயிரம் தகர்த்தவன்
படைகள் ஆயிரம் பார்த்தவன்
பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன்
பேரலையைக் கண்டவன், பேரிடரும் கண்டவன்
பெயர் மாறி, உரு மாறி வலுவானவன்,
எதுவந்த போதும் நிறம் மாறாதவன்
வந்தவர் எத்தனை, போனவர் எத்தனை
கண்டது எத்தனை, கொண்டது எத்தனை
என் பலம் எனதல்ல,
என்னில் இரண்டற கலந்து வாழும் என் மக்களே என் பலம்.
நீரால், நெருப்பால், காற்றால், நிலத்தால், உளத்தால்
எவ்வழி இடர் வரினும், தளர்வரினும் என் கரம் இறுகப் பற்றும்
என் மக்களே என் பலம்.
என் மக்கள் மனதில் தன்னம்பிக்கை அணிந்து கொண்டு
முகத்தில் கவசம் அணிந்து
சமூக விலகலோடு
இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு தோள் கொடுப்பர்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
மீண்டு வருவேன்! நான்சென்னை!.
என்னை வீழ்வேனென்று நினைத்தாயோ!
மீண்டு வருவேன்! நான்சென்னை!.
இந்த கவிதையை தமிழக அமைச்சர் வேலுமணி அவர்கள் தனது சமூக வலை பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரிடர்கள் வென்ற சாதனை மைல்கற்களே என் வரலாறு.
— SP Velumani (@SPVelumanicbe) July 6, 2020
ஆயிரமாயிரம் களப்பணியாளர்கள் அரசின் முயற்சிகளோடு இணைந்து, முகக்கவசம் அணிந்து, சமூக விலகல் கடைபிடித்து, தற்காத்து இம்முறையும் இடர் வெல்வேன். மீண்டும், மீண்டு வருவேன்!#வீழ்வேனென்றுநினைத்தாயோ #நான்சென்னை@chennaicorp @rparthiepan pic.twitter.com/U5X8KwG224
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments