சிம்ரனை தனது பாணியில் ரசித்த பார்த்திபன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் குடியிருந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்குப் பின் அவர் திரையுலகை விட்டு விலகி இருந்தாலும் அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவர் நடித்த பேட்ட திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சிம்ரனின் மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சிம்ரனின் பழைய துள்ளலான நடனத்துடன் வெளியாகியுள்ள இந்த வீடியோவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மியூசிக் வீடியோ குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது பாணியில் தனது சமூக வலைத்தளத்தில் ரசனையுடன் கவிதை நயத்துடன் விமர்சனம் செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
காதLook-கு ....
Look தேவையில்லை,
வயது தேவையேயில்லை,
மனது மட்டுமே பரந்து விரிந்து கிடந்தாலே போதுமானது!
சிம்ரன் அக்காலம் இக்காலம் என்றில்லாமல் காலம் கடந்தும்
காதல் கடத்தும் வல்லமை வாய்ந்தவர்! தீவிர(ரசனை)வாதி!
காதLook-கு ....
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 14, 2020
Look தேவையில்லை,
வயது தேவையேயில்லை,
மனது மட்டுமே பரந்து விரிந்து கிடந்தாலே போதுமானது!
சிம்ரன் அக்காலம் இக்காலம் என்றில்லாமல் காலம் கடந்தும்
காதல் கடத்தும் வல்லமை வாய்ந்தவர்! தீவிர(ரசனை)வாதி!https://t.co/t6jNQRCkCn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com