ஆணென்ன?பெண்னென்ன? நயன்தாரா போல் நாமும் செயல்படுவோம்: வெள்ள மீட்பு பணி குறித்து பார்த்திபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமதி நயன்தாரா உட்பட பலரும் வெள்ளத்தால் சிக்கிய மக்களின் தேவை அறிந்து செயல்பட்டது போல் நாமும் செயல்படுவோம். இதில் ஆணென்ன?பெண்னென்ன? என என்று நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
மாத’ர் பிரச்சனைகளை மிகப் பெரிய சவாலாக சந்திக்க வேண்டியிருக்கிறது.அதுவும் மாற்று துணி கூட இல்லாமல் அல்லாடும் இதுபோன்ற இடர் காலங்களில்!ஒரு குடும்பத்தையே லகுவாக தாங்கும் அவர்கள் சக்தியிழக்கும் சமயங்களில் அணுசரனையாய் உதவுதல் அவசியமாகிறது.
திருமதி நயன்தாராவும் இன்னும் பலரும் இதை புரிந்துக் கொண்டு நேற்றே செயல்பட்டார்கள். குறிபறிந்து உதவுதலில் ஆணென்ன?பெண்னென்ன?இருபாலுமே ஒரு பெண்ணிடமிருந்து வந்தவர்கள் தானே? இயன்றதை இதயத்துடன் செய்வோம். விமர்’சனங்களை மீறி உள்மன நிம்மதி என்ற விமோட்சனம் பெறுவோம்.
Mr ஹரிஹரன் from Student Federation of India போன்ற இளைஞர்கள் தன்னலம் பாராது ஈடுபாட்டுடன் செய்யும் உதவியிலேயே உய்த்திருக்கிறது மனிதம்! இவர்களை ஊக்கப்படுத்தி அடுத்த தலைமுறையையாவது முறையான மக்களாட்சியை (மக்களுக்கு மட்டுமே சேவை செய்யும்) கற்பித்து, மழைநீரோடு கலந்துவிட்ட கழிவுகளை அகற்றி சுத்தமாக்கி பருகுவோம்.
மாத’ர் பிரச்சனைகளை மிகப் பெரிய சவாலாக சந்திக்க வேண்டியிருக்கிறது.அதுவும் மாற்று துணி கூட இல்லாமல் அல்லாடும் இதுபோன்ற இடர் காலங்களில்!ஒரு குடும்பத்தையே லகுவாக தாங்கும் அவர்கள் சக்தியிழக்கும் சமயங்களில் அணுசரனையாய் உதவுதல் அவசியமாகிறது.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 7, 2023
திருமதி நயன்தாராவும் இன்னும் பலரும் இதை… pic.twitter.com/otO1WHBKXj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com