ஒரே நாளில் 'இந்தியன் 2', 'டீன்ஸ்' ரிலீஸ்.. தனது பாணியில் விளம்பரம் செய்த பார்த்திபன்..!
- IndiaGlitz, [Friday,July 05 2024]
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2 ’மற்றும் பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’டீன்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்தது. மாஸ் நடிகர், மாஸ் இயக்குனர் மற்றும் மிகப்பெரிய பட்ஜெட் படமான ’இந்தியன் 2’ படத்துடன் புது முகங்கள் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கும் ‘டீன்ஸ்’ திரைப்படத்தை பார்த்திபன் வெளியிடுவதை பார்த்து கோலிவுட் திரை உலகமே ஆச்சரியத்தில் உள்ளது.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ ரிலீஸ் ஆகும் அதே நாளில் ’டீன்ஸ்’ ரிலீஸ் ஆவது குறித்து நடிகர், இயக்குனர் பார்த்திபன் தனது பாணியில் வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தில் அவர் கூறியிருப்பதாவது:
நண்பர்களே! இத்திரையுலகில் எல்லோருக்கும் நான் நண்பன் ஆனால், எனக்கு நீங்களே! இந்திய அளவிலான ஒரு பிரமாண்ட படத்துடன் நம் ’டீன்ஸ்’ ஜூலை 12 முதல் காட்சியிலேயே குடும்பம்/குழந்தைகளுடன் பாருங்கள், சிறப்பாய் இருந்தால் ஊருக்குச் சொல்லுங்கள், சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடனே களத்தில் நிற்கிறேன்!
நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையை ரிசர்வேஷன் தொடங்கிய உடனேயே காட்டுங்கள். நானே கமல் சாரின் தீவிர ரசிகன் தான். இந்தியன் 2வை இருமுறை பார்த்து விட்டாவது நம் ’டீன்ஸ்’ படத்தை கண்டு கொள்ளுங்கள்.
டீன்ஸ் அனைவரும் இந்தியனை பார்த்து பாராட்டி மகிழ வேண்டும். அதே போல இந்தியன்ஸ் அனைவரும் டீன்ஸ்-ஐ... உளப்பூர்வமான இவ்வேண்டுகோளை மீறிய விளம்பரம் நானென்ன செய்திட முடியும்? இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கு முதலில் ஷேர் செய்யுங்கள் ப்ளீஸ்
நண்பர்களே!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 5, 2024
இத்திரையுலகில் எல்லோருக்கும் நான் நண்பன் ஆனால்,
எனக்கு நீங்களே!
இந்திய அளவிலான ஒரு பிரமாண்ட படத்துடன் நம் TEENZ ! 12/07/2024 அன்று முதல்…
முதல் காட்சியிலேயே குடும்பம்/குழந்தைகளுடன் பாருங்கள்,சிறப்பாய் இருந்தால் ஊருக்குச் சொல்லுங்கள்-சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடனே… pic.twitter.com/S6IjH65QS7