'டீன்ஸ்' படத்திற்கு கூட்டமே இல்லை.. நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவதும் இல்லை.. பார்த்திபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பார்த்திபன் இயக்கி நடித்த 'டீன்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்து வருகிறது என்பதும் படத்தின் வசூலும் திருப்திகரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
முதல் நாளில் ’இந்தியன் 2’ திரைப்படம் வெளியானதால் அந்த படம் குறித்த பரபரப்பான பேச்சு மட்டுமே இருந்த நிலையில் இரண்டாவது நாளிலிருந்து 'டீன்ஸ்’ படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் ஊடகங்களில் வைரலாக தொடங்கியது. மேலும் இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் பாசிட்டிவாக இருந்ததை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த படத்திற்கு ஆடியன்ஸ் வருகை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'டீன்ஸ்’ படத்தின் வரவேற்புக்கு நெகிழ்ச்சி அடைந்த பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான்! என் கண்ணீர் மழைத்துளி போலத் தூய்மையானது! நேற்று 'டீன்ஸ்’ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது.வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை, மறுநாள் டிக்கட்டே இல்லை. எத்தனை ஸ்க்ரீன்ஸ்? எவ்வளவு வசூல்? இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை. போதும் இந்த ஆனந்தக் கண்ணீர்.
கோடிகளை என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை. பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப்படுத்துகிறது. தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி’ என உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார்.
Thanks friends
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 15, 2024
For your unlimited love&support
நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான்!
என் கண்ணீர் மழைத்துளிப் போலத் தூய்மையானது!
நேற்று TEENZ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது.வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை,மறுநாள்
டிக்கட்டே இல்லை.
எத்தனை screens? எவ்வளவு… pic.twitter.com/xTQM44X8lI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments